Friday, June 29, 2012

ஒரு தந்தையின் கடிதம்:


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். 
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் 
பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

Tuesday, June 12, 2012


 மனிதன்




பிறரைப் புரிந்து கொள்பவன் புத்திசாலி.
தன்னை அறிந்து கொள்பவன் ஞானி.
பிறரை வெற்றி கொள்பவன்
பலம் படைத்தவன்.
தன்னை வெற்றி கொள்பவன்
உள்வலிமை கொண்டவன்.

போதும் என்ற மனநிறைவு 
கொண்டவன் செல்வந்தன்
சளைக்காது போராடுபவன் 
லட்சியத்தில் நிலைத்து நிற்பவன்
பதவியைத் தக்க வைத்துக் கொள்பவன்
வாழ்கை சகிப்புத் தன்மையுடன் நீள்கிறது.


மனிதன் இறக்கிறான்
ஆனாலும் மறக்கப்படுவதில்லை
அவன் சாவதில்லை
அவன் நீண்டகால ஆயுள் கொண்டவன்.